அநுராதபுரத்தில் மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் படுகாயம்
அநுராதபுரம் – பாதெனிய வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது 18 வயதுடைய மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
