
இந்த ஆண்டு வாகன பதிவு வீழ்ச்சி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதிய கார் பதிவு 36.3 சதவீதம் குறைந்துள்ளது, என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவி;துள்ளது.
2021 ஜனவரி முதல் அக்டோபர் வரை 28,434 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 18,100 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 2021 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பேருந்து பதிவு 16.3 வீதமாக அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் 246 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது இந்த ஆண்டு 40 ஆக அதிகரித்துள்ளது
ஜனவரி முதல் ஒக்டோபர் வரை மொத்தமாக 34 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவி;துள்ளது.
