அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, பொது அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.