சுவிட்சர்லாந்தில் 50ற்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவு
சுவிட்சர்லாந்தில் நிலவுகின்ற கடுமையான பனிப்பொழி காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகளவிலான வீதிவிபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி விபத்துகளில் சோலத்தூண் மாநிலத்தில் மட்டும் நேற்று வியாழக்கிழமை 30 திற்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
மேலும் ஆர்கவ் மாநிலத்தில் 16 சிறியளவிலான விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் , பெருமளவிலான சொத்திழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனங்களின் டயர்களின் தரம் , பனிப் பொழிவின் போது சாரதிகளின் கவனக்குறைவு போன்ற காரணங்களினாலேயே அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றது.