MOP உரத்தின் விலை குறைப்பு

MOP எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உரத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் படி 50 கிலோகிராம் எடைகொண்ட MOP பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் மூடை ஒன்றின் புதிய விலை 15, 000 ரூபாவாகும்.

குறித்த உரத்தை, அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்