யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், மற்றொரு வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகைகள் இன்று புதன்கிழமை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன

இதனையடுத்து, இரு பிரதிவாதிகளும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இருவருக்கும் சொந்தமான 59 மில்லியன் ரூபாய் கூட்டு வங்கி கணக்கு தொடர்பான பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.