நடமாடும் சேவை
-யாழ் நிருபர்-
வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் ஒக்டடோபர் மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் பி.ப 4.30 மணிவரை வடமாகாணசபை வளாகம், கைதடியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணை யகளத்தில் பணிப்பாளர் சுஜிவா சிவதாஸ் தெரிவித்தார்.
குறித்தநடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளன.
1. வாசித்தலில், எழுதுதலில், விசேடதேவையுடையோருக்கான சாரதி அனுமதிப் பரீட்சையும் மருத்துவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலும்.
2. சர்வதேசசாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளல்.
3. தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஒமினிபஸ் ஆகமாற்றம் செய்தல்
4. வாகன பதிவுப் புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.
5. வாகன இலக்கத்தகடு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள்.
6. வாகன உடமை மாற்ற விண்ணப்பங்கள் கையேற்றல்.
7. 2014, 2015ம் ஆண்டு செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாகனங்களின் நிபந்தனைகளை நீக்குதல்.
8. வாகன நிறை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல்.
9. இதுவரை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுஜதீர்க்கப் படாத நிலுவைகள்
10. வாகன வருமானவரி தொடர்பானவை. போன்ற விடயங்கள் நடமாடும் சேவையில் இடம்பெறவுள்ளதன் காரணமாக பொதுமக்கள் இரண்டு நாள் நடமாடும் சேவையின் மூலம் பயன் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
