கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிடப்படும்

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த வரி அறவிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.