மட்டு.வாழைச்சேனையில் வழக்கு ஒன்றிற்காக சென்ற நபர் வீடு திரும்பவில்லை
மட்டக்களப்பு-வாழைச்சேனை-சுங்கான்கேணியை சேர்ந்த, வீரக்குட்டி செல்வராசா (வயது 51) என்பவரை, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை, என வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு ஒன்றிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றுக்கு சென்றுள்ளார்.
வழக்கு முடிந்து, நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய குறித்த நபர், இதுவரை வீட்டிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
