காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு
பேருவளைப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலையில்; கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பேருவளை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த பொலிசார் இவர் பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்ட போதும், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் பேருவளை மருதானை லெல்லம மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
