காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்-

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேல்வத்தை கும்புக்கன் ஓய ஆற்றில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மெதபத்தன பிஸ்ஸகம ஹொப்டன் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இருந்து காணவில்லை என அவரின் மனைவியினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பொலிஸாரும் உறவினர்களும் ஊர் மக்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்