
ஈரான் ஏவிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது!
ஈரானால் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது.
மத்திய இஸ்ரேல் முழுவதும் இந்தத் தாக்குதல்கள் அபாய எச்சரிக்கை ஒலிகளை எழுப்பினாலும், அவை அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டன.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானால் அவ்வாறு ஏவப்பட்ட 7 பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாம் அழித்துள்ளதாகச் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) குறிப்பிட்டுள்ளது.
