
கல்வி அமைச்சின் முக்கிய மாற்றங்கள் தொடர்பான அறிவித்தல்
தரம் ஒன்றிற்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
அத்துடன்இ 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும் போது தாம் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவை கொண்டிராத பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.
மாறாக அவற்றை அமைச்சகத்திற்கு அனுப்பக்கூடாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் 3ஆம் தவணை ஆரம்பமான டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
2023 மார்ச் 24ஆம் திகதியன்று 2022ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை முடிவடைந்த பின்னரே பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து 2023ஆம் ஆண்டில் இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.