
எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்
அத்தியாவசிய சேவை விதிமுறைகளுக்கு அமைய எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு செய்யும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்படவுள்ள பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஊழியர்கள் தற்போது சுகயீன விடுமுறையில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை வலியுறுத்தி பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட எரிசக்தி துறையை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானியில் பிரசுரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
