வியட்நாம் ஏரியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்
வியட்நாம் நாட்டில் ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியிலேயே இவ்வாறு மீன்கள் இறந்து மிதக்கின்றது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏரியை நிர்வகித்து வரும் நிறுவனம், மீன்களுக்காக கூடுதலாக தண்ணீரைத் திறந்து விட திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதிகப்படியான வெப்பத்தால் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து மீன்கள் அதிகளவில் இறந்து விட்டதாகவும் அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்