பால் மாவின் விலை குறைப்பு

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்தவாரம் முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அண்ணளவாக 1 கிலோ பால் மா பொதி 200 ரூபாவாலும்,  400 கிராம் பால்மா பொதி 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.