
சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி – கைதிகள் தப்பியோட்டம்
வடக்கு மெக்சிகோவில் உள்ள சிறைச்சாலையில் துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு;ளது.
இதன்போது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் அத்துடன், கைதிகள் பலர் சிறை ஒன்றில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்
போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் இத்துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுpக்னறது.
கவச வாகனங்களில் சிஹவாவா மாநில சிறைப் பகுதிக்கு வந்தவர்கள் முதலில் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலின்போது கைதிகள மற்றும் சிறை அதிகாரிகளுடன் 14 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 24 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
வெவ்வேறு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்த சிறையில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கறுப்பு உடையில் இருந்ததாகவும் காவல்துறையினரை விட சிறந்த ஆயுதம் ஏந்தியதாகவும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீதும் அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உதவிக்காக இராணுவமும் தேசிய பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட்டிலும் இந்த சிறையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 11 கைதிகள் தப்பிச்சென்றனர்.
மெக்சிக்கோவில் போதைப்பொருள் போரில் இதுவரை 60,000 க்கும் மேற்பட்ட மெக்சிகோ மக்கள் காணாமல் போயுள்ள அதேவேளை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
