
ஜனாதிபதி மற்றும் கலாநிதி கீதா கோபிநாத் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்துக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
