கடிதம் எழுதி விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய யுவதி மாயம்

மொனராகலை பிரதேசத்தில் கராடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கராடுகல பொலிஸார் தெரிவித்தனர்.

கராடுகல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த யுவதி தனது சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான் வேலை செய்யும் கடைக்குச் செல்வதாகக் கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காணாமல்போன யுவதியின் குடும்பத்தினர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கராடுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்