Last updated on January 4th, 2023 at 06:53 am

முதலீட்டாளர்கள் யாரும் முன்வரவில்லை

முதலீட்டாளர்கள் யாரும் முன்வரவில்லை

அம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தை முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான அபிலாஷைகள் கோரப்பட்ட போதிலும்,  நிரந்தர முதலீட்டாளர் எவரும் இதுவரை முன்வரவில்லை, என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எனினும் சிலர் விமான பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு முன்வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டு செலவு 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது, ஆனால் அந்த செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.