
ஆட்ட நிர்ணய சதி : சசித்ர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
ஆட்ட நிர்ணய சதி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25 வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமது சட்டத்தரணி ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுகளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களை தடுப்பதற்கான விசேட காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானதை அடுத்து சசித்ர சேனாநாயக்க கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்