மருதலிங்கம் பிரதீபன் அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனை வரவேற்று பொன்னாடை போர்த்து, மலர்மாலை அணிவித்து வரவேற்றதுடன் தமது அலுவலக கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி ஏஸ்.ஸ்ரீமோகன், மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரி கள்,உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் நேற்று புதன் கிழமை பிரதமர் அலுவலகத்தினால் வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனுக்கான நியமனம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்