ஜெனீவாவில் நாளை பல வீதிகள் மூடப்படும் : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

ஜெனீவாவின் மையத்தின் பெரும் பகுதிகள் அணிவகுப்புக்காக நாளை சனிக்கிழமை மூடப்படும் என சுவிட்சர்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா ஏரியின் அருகேயான நடைபாதையான Quai Gustave Ador,  காலை 11 மணி முதல் மூடப்படும் என்றும் நாளை மதியம் 2.30 மணி முதல் மொண்ட்-பிளாங்க் (Mont-Blanc) பாலம் உட்பட பல மத்திய சாலைகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொண்ட்-பிளாங்க் வாகன தரிப்பிடத்தில் கார்களை வைத்திருக்கும் ஓட்டுநர்கள், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கேயே சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள பல வாகன தரிப்பிடங்கள் மூடப்படுவதுடன் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஏரி அணிவகுப்பினால் பொது போக்குவரத்துக்கு பாரியளவில் தடைப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குள் அனைத்து சாலைகளும் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்