மன்னார் – எருக்கலம்பிட்டியில் 14வது வருடாந்த ஹஜ் விழா!
மன்னார் – எருக்கலம்பிட்டி சமூக அபிவிருத்தி மற்றும் ஜனாஸா நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள 14 வது வருடாந்த ஹஜ் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.
மன்னார், எருக்கலம்பிட்டி தேசிய பாடசாலை மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இந்த ஹஜ் விழா இடம் பெறுவதாக ஏற்பாட்டுக்குழு உறுப்பினர், எச்.என்.எம்.பஸ்மின் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மசூர் ஞாபகார்த்தமாக, இவருடம் ஹஜ் விழா இடம் பெறுகின்றது.
இவ்விழாவின் போது, கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், கலை கலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது, ஊரை விட்டு இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் எருக்கலம்பிட்டி மக்கள், ஒன்று கூடும் நிகழ்வாக, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மர்ஹும் நூர்தீன் மசூர், வன்னி புணர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த, 2003 ஆம் ஆண்டு இந்த ஹஜ் விழாவை ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடக் கூடியது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்