மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் விஜயம்
-மன்னார் நிருபர்-
மன்னாருக்கு வருகை தந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள தேசிய உப்பு நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தேசிய உப்பு நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு, உப்பு உற்பத்தியையும் பார்வையிட்டார்.
மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஏனைய நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடினர்.
-இதன் போது உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலந்து கொண்டதோடு, மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.