மனைவியின் சகோதரியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2008 ஆம் ஆண்டு, தனது வயது குறைந்த மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்து கருத்தரிக்க செய்த குற்றத்திற்காக 56 வயது நபர் ஒருவருக்கு 36 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்த ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே, பாதிக்கப்பட்டவருக்கு சந்தேக நபர் 600,000 நட்டஈடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், 2008 ஆம் ஆண்டு கதிர்காமத்தில் உள்ள வீடொன்றில் வைதது தனது மனைவியின் சகோதரியை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்வு செய்யதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொழும்பில் வேலை செய்யும் நிலையில், குறித்த பெண் தனது சகோதரி மற்றும் மைத்துனருடன் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியும் தாயும் இந்த விடயத்தை வெளியில் தெரிய வராது மறைத்து வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தார்.

அதனைத்தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.