
யாழ்.சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் – ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு அவர் மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு நள்ளிரவு 12 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
