மகரகமை தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய் நஷ்டம் – ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர்

மகரகமை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய்   நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் குசும்சிறி தசநாயக்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த அவர், இத் தீ விபத்து தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

இன்று காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் எங்களுக்கு சுமார் 400 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ ஆடை விற்பனை நிலையமொன்றில் ஆரம்பிக்கவில்லை, மாறாக பாரம்பரிய அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் இடத்திலிருந்தே பரவியது.

எனினும், தீ பரவியவுடன் அதனைத் தடுப்பதற்கு துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், நகர சபை ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரம், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஆடைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட எவ்விதத்திலும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.