பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு டெய்லி மெயில் வலியுறுத்தல்
குறைந்த செலவில் சிறந்த விடுமுறைப் பொதிகளை இலங்கை வழங்குவதால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு இங்கிலாந்தின் டெய்லி மெயில் பத்திரிகையின் மெயில் ஒன்லைன் இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் தமது பிரஜைகளுக்கு இலங்கை தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இப்போது இலங்கைக்கான பயணத்திற்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது.
மெயில் ஒன்லைன் இணையத்தளத்தின் கூற்றுப்படி, இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு வருவது நிச்சயமாக எளிதானது, இந்தியாவிற்கான சுற்றுலா விசாவைப் பெற மூன்று வாரங்கள் காத்திருந்து தூதரகத்திற்கு நேரில் வர வேண்டும்.
ஆனால், இலங்கைக்குள் பிரவேசிக்க, 36 மணித்தியாலங்களில் உங்களது டிஜிட்டல் விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய மெயில் ஒன்லைன் இணையத்தளம், இலங்கையில் உள்ள, புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் சிறந்த விருந்தோம்பல்களுடன் இலங்கையை பார்வையிடுமாறு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தியுள்ளது.