போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களும் தலையிட வேண்டும்

பாடசாலைகள் மற்றும் இளைஞர் சமூகம் மத்தியில் பரவியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களும் தலையிட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், யானை – மனித மோதல் இன்று நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார.