
மீ – ஓயா பாலத்திற்கு அருகில் லொறி கவிழ்ந்து விபத்து
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் மீ – ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மீ – ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று இரவு 10 மணியளவில் சிறிய லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது லொறியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
