LPL தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்
முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரானது டிசம்பர் 1 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டிய செய்திக்குறிப்பின்படி, இந்திய வீரர்களைச் சேர்ப்பது “பிராந்தியத்தில் உள்ள ரசிகர்களுக்கு ஒரு புதிய அளவிலான உற்சாகத்தை சேர்க்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளன.