காதல் விவகாரம்: இளைஞனின் கை துண்டிப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இளைஞர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்