சீனாவுக்கு விற்பனை செய்யப்படும் பாலியல் நேரலை காட்சிகள்

பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது, முன்னர் ​​கொள்ளுப்பிட்டியில் வசித்த குறித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் சோதனையின் போது, ​​மற்றொரு ஜோடி குறித்த வீட்டில் இருந்து, பாலியல் காட்சியில் நேரடியாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு ஜோடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்