லிட்ரோ எரிவாயு பாரிய விலை குறைப்பு
லிட்ரோ சமையல் எரிவாயு விலை, நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,409 ரூபாவாக உள்ளது.