
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும்
அடுத்தமாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம் செய்யவில்லை.
இம்முறை டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப சமையல் எரிவாயுவின் விலையையும் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
