எரிவாயு விலை திருத்தம் இன்று
எரிவாயு விலை திருத்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனம் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன், முன்னதாக உலக சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 05 ஆம் திகதி, கடைசியாக எரிவாயு விலை திருத்தப்பட்டது, அங்கு லிட்ரோ நிறுவனம் 12.5 எரிவாயு சிலிண்டரை 201 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, தற்போது எரிவாயு சிலிண்டர் 4,409 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.80 குறைக்கப்பட்டு, தற்போதைய விலை ரூ.1,770 ஆக உள்ளது.
ஜனவரி 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த எரிவாயு விலை திருத்தத்தின் பின்னர், லாஃப்ஸ் நிறுவனம் உள்நாட்டு எரிவாயுவின் விலையையும் குறைத்துள்ளதுடன், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 5,080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.