லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்

உள்நாட்டு லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது 4409 ரூபாவாக இருந்த 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்புடன் 4743 ரூபாவாகும்

தற்போது 1770 ரூபாவாக 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.134 உயர்ந்து, புதிய விலை ரூ.1904 ஆக உள்ளது.

61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாவாகும்.

உலக சந்தையில் எரிவாயு விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டார்.