
இன்று ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்
நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவற்றுள் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80000 சமையல் எரிவாயு கொள்கலன்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எவ்வித அசௌகரியமும் இன்றி நுகர்வோர் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முதித்த பீரிஸ் உறுதியளித்தார்.
மேலும், ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ள எல்பி எரிவாயு தாங்கியில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இன்று குறைந்தது 117,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நிறுவனம் எதிர்பார்த்துள்ளது எனவும், எதிர்வரும் நாட்களில் இது தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
