நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பலத்த மின்னல் தாக்கங்களுடன், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த ‘அம்பர்’எச்சரிக்கை, இன்று இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.