
என்னை பற்றி என்னவென்றாலும் சொல்லட்டும் : விமர்சனங்களை தடுக்க வேண்டாம்
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, என தெரிவித்துள்ளார்.
