கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : 600 லீற்றர் கோடா மீட்பு

 

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லீற்றர்  கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை இரவு குறித்த உற்பத்தி நிலையத்தை மருதங்கேணி பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

இதன்போது நான்கு கொள்கலன்களில் 600 லீற்றருக்கு மேற்பட்ட கோடா, கசிப்பு வடிப்பதற்கு தேவையான பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்