இலங்கைக்கு இறுதி வாய்ப்பு

இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்ற நியூசிலாந்து முதல் அணியாக இன்று அரையிறுதியை நெருங்கியுள்ளது.

இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்ற நியூசிலாந்து முதல் அணியாக இன்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுப்படத் தீர்மானித்தது

அதன்படி முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 61 ஓட்டங்களையும், பின் அலன் 32 ஓட்டங்களையும், டெரில் மைக்கல் 31 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்துவீச்சில், அயர்லாந்தின் ஜோஸ் லிட்டில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் இந்த மூன்று விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் ஹெட்ரிக்காக பெற்றமை குறிப்பிடத்தக்கது.

186 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த நிலையில், நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிபெற்றது.

அயர்லாந்து சார்பில் போல் ஸ்ட்ரிங் 37 ஓட்டங்களையும், அண்ட்றி பல்ப்ரின் 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் லோகி பெர்கியூசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி, மிட்சல் சார்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றனர். போட்டியின் ஆட்டநாயகனா கேன் வில்லியம்சன் தெரிவானார்.

இதேவேளை, நியூஸிலாந்து அணி அரையிறுதியை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் இன்று அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, பின்னர் இலங்கை அணி நாளை இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இலங்கை அரையிறுதிக்கு தகுதிபெற முடியும்.