குடு சலிந்துவின் 2 கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த சலிந்து மல்சிக எனப்படும் ‘குடு சலிந்து’ என்பவருக்குச் சொந்தமான அளுபோமுல்ல பகுதியில் உள்ள இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வீடும், காணியும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.