கொத்துரொட்டி சாப்பிட 3 லட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு காதலியை அழைத்து வந்த இளைஞன்

கொத்து ரொட்டி சாப்பிடுவதற்காக தந்தையிடமிருந்து 3 லட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தனது காதலியையும் அழைத்துக்கொண்டு காலிக்கு சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் 17 வயது இளைஞனும் 14 வயதுடைய சிறுமியும் இருந்துள்ளனர். அதனைகண்டு சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் குறித்த இளைஞன் தந்தையிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடி வந்துள்ளாக தெரியவந்துள்ளது.

இவர்கள் பாதுக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொத்து ரொட்டி சாப்பிடும் ஆசையின் காரணமாக குறித்த நபர் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து கொண்டு காலிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் நேற்று புதன்கிழமை மாலை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க