KKR 40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்க வாய்ப்பு

 

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏலம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களை விடுவித்தால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது.