கிண்ணியா பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு புதிய மைதானம்

-திருகோணமலை நிருபர்-

நீண்டகாலமாக புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளம் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு மைதானம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் குட்டியாகுள  பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் வருகின்ற காணியை பயன்படுத்துவதற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் திருகோணமலை மாவட்டத்தின் உதவி ஆணையாளர் திரு. விஸ்னுவரதனுடன் கலந்துரையாடியதற்கமைவாக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்டமைக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியுடன் நேற்று வியாழக்கிழமை 50 வருடங்களுக்கு மேல் விளையாடுவதற்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்தகுறை நிவர்த்தி செய்யப்பட்டது.