
அரச காணியில் விவசாயம் மேற்கொண்டோர் மீது வழக்கு தாக்கல்
-கிளிநொச்சி நிருபர்-
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பகாம கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அரச காணி பக்கசார்பாக பகிர்ந்தளிக்கப்படுகிறதா என கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பகாம ம் பகுதியில் அரச காணிகள் சில இருந்துள்ளது.
குறித்த காணியில் அதே கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் குறித்த அரச காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காணி துப்பரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
இதற்கு உடனடியாக கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக காணி துப்பரவு பணிகள் நிறுத்தப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த காணியில் இதற்கு முன் காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகும் ஒரு சிலருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் வேறு கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள அரச காணிகளை அந்தந்த கிராம மக்களுக்கு விவசாயம் மேற்கொள்ள பிரதேச செயலாளர் அனுமதி வழங்கி அனுமதி பத்திரமும் வழங்கப்பட்டது.
தம்பகாம கிராமத்தில் சில மக்களுக்கு மாத்திரம் அரச காணி விவசாயத்திற்கு என வழங்கப்பட்டுள்ளமை பக்கசார்பாக செயற்படுகின்றனரா என மக்கள் மனதில் கேள்வி எழும்புகின்றது.
எனவே குறத்த தம்பகாம கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அரச காணியை விவசாய நடவடிக்கைகளுக்காக அதே கிராம மக்களுக்கு சம்மாக பகிர்ந்தளிக்குமாறு பிரதேச செயலாளரிடம் மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
