
கரை ஒதுங்கிய சடலங்கள் அரச செலவில் நல்லடக்கம்
-கிளிநொச்சி நிருபர்-
வடமராட்சி கடற் பரப்பில் இனம் தெரியாது கரை ஒதுங்கியிருந்த மூன்று சடலங்களும் நேற்று புதன்கிழமை அரச செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வடமராட்சி கடற் பரப்பில் இனம் தெரியாத ஐந்து சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தன.
இதில் மூன்று சடலங்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும், இரண்டு சடலங்கள் கிளிநொச்சி வைத்திய சாலையிலும் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் இருந்த மூன்று சடலங்களும் ஆறு மாதங்கள் கடந்தும் யாரும் உரிமை கோரப்படாமலிருந்த நிலையிலும், இடப்பற்றாக்குறை மற்றும் பராமரிக்க முடியாத காரணத்தினாலும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய அரச செலவில் நேற்று மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
