காத்தான்குடி சிறுதொழில் முயற்சி விற்பனைக் கண்காட்சி!

 

காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி தொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக விற்பனைக் கண்காட்சி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக விற்பனைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்த விற்பனைக் கண்காட்சியை, காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இதை காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு றிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும், இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.